ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் விசாகத் திருவிழா துவக்கம்
ADDED :3436 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவாடானையில் பிரசித்திபெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றுடன் துவங்கியது. 21ம் தேதி முடிய விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் இந்திரவிமானம், கைலாச வாகனம், வெள்ளிரிஷப வாகனம், யானை, குதிரை, பூத வாகனங்களில் சினேகவல்லி தாயாருடன் ஆதிரெத்தினேஸ்வரம் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 20ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 21ம் தேதி தீர்த்தாவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோயில் செயல்அலுவலர் சந்திரசேகரன் மற்றும் 22 கிராமத்தார்கள் செய்துள்ளனர்.