கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் கொடியேற்றம்
கொடைக்கானல்: கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயில் கொடியேற்றம் செவ்வாய்கிழமையன்று துவங்கியது. கோயில் கொடிகம்பத்தில் உள்ள கொடியினை இந்து முன்னணி நகர தலைவர் சிவக்குமார் ஏற்றினார். முன்னாள் தலைவர் கோவிந்தன், விழாக்குழு தலைவர் முரளி, செயலாளர் வேலுச்சாமி கலந்து கொண்டனர். பெரியமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. வருகின்ற மே 16 ந்தேதி முதல் மண்டகப்படிகள் நடத்தப்பட்டு சப்பரபவனியில் சென்று தங்கி பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிப்பார். 20 ந்தேதி அம்மன் ஊஞ்சல் உற்சவம், 24 ந்தேதி மாவிளக்கு பூஜை, 25 ந்தேதி தீச்சட்டி எடுத்தல் மற்றும் பொங்கல் வைத்தல் பறவைக்காவடி போன்ற நேர்த்திகடன்களை பக்தர்கள் நிறைவேற்றுவர். இறுதி நாளான மே 31 ந்தேதியன்று மறுபூஜை, பாலாபிஷேகம் நடைபெறும். ஏற்பாடுகளை வட்டார இந்துமகா சங்கத்தினர், இந்து முன்னணியினர், இளைஞரணியினர் செய்து வருகின்றனர்.