உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் மாரியம்மன் கோவிலில் இன்று பூச்சொரிதல்

கரூர் மாரியம்மன் கோவிலில் இன்று பூச்சொரிதல்

கரூர்: கரூர் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா இன்று நடக்கிறது. கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 8ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. இன்று பூச்சாட்டுதல், 15ம் தேதி காப்பு கட்டுதல், 23ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல், 25ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல், வரும், ஜூன், 2ம் தேதி பஞ்ச பிரகாரம், 3ம் தேதி புஷ்ப பல்லக்கு, 4ம் தேதி ஊஞ்சல், 5ம் தேதி அம்மன் குடிபுகுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !