திண்டுக்கல் அபிராமி கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :3434 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் அ.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன் வெற்றிக்காக சிறப்பு பூஜை நடத்தினர். இங்குள்ள காளகஸ்தீஸ்வரர், அபிராமியம்மன், ஞானம்பிகை, பத்மகீரிஸ்வரர் சன்னதிகளில் பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் மேயர் மருதராஜ், அபிராமி கூட்டுறவு வங்கி தலைவர் பாரதிமுருகன், கவுன்சில் வி.டி.ராஜன் பங்கேற்றனர். பின்னர் கோயில் அருகில் உள்ள வீதிகளில் பிரசாரம் செய்த வேட்பாளர் பேசியதாவது: மழை நேரத்தில் சாக்கடை நீர் முழுவதும் அபிராமியம்மன் கோயிலை சுற்றி நின்றது. இதனால் பக்தர்கள் மனம் வாடி, வதங்கி நின்றனர். திண்டுக்கல் மக்களின் நலன் கருதி அபிராமியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டது. இதற்கு பெரும் முயற்சியை எடுத்தது அ.தி.மு.க.,தான், என்றார்.