திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி பூஜை
ADDED :3796 days ago
திருமலைக்கேணி: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமிகோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், இளநீர், பன்னீர், சந்தனம், தயிர், திருமஞ்சணம், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.