உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பம் சீரமைக்கப்படுமா

கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பம் சீரமைக்கப்படுமா

ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்துார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழமைவாய்ந்த இக்கோயிலுக்கு எதிரில் தெப்பம் அமைந்துள்ளது.  மழைக்காலத்தில் மழைநீர் இதில் தேங்குவதால் இப்பகுதி நிலத்தடி நீர் மட்டம் சமன்செய்யப்படும். தற்போது தெப்பத்தில் படிக்கட்டுகள் சரிந்தும், உடைந்தும் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கால்நடை வைத்திருப்பவர்கள் தெப்பத்தின் அருகில் அவற்றை கட்டி வைத்துள்ளனர். தேங்கி உள்ள குப்பை அப்புறப்படுத்தப்படவில்லை.  நீர் வரத்து பகுதிகள் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளதால் மழைநீர் திசை மாறி செல்லும் நிலை உள்ளது. கோடை மழை பெய்து நீர் தெப்பத்தில் தேங்கினால் குப்பையுடன் சேர்ந்து சுகாதாரக்கேடு ஏற்படும். தெப்பத்தை சீரமைக்க, கோயில் , ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !