பிரம்மாண்ட ஆறுமுகர்!
ADDED :3434 days ago
கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீசுவரர் கோயில் துர்க்காம்பிகை பிரசித்திபெற்றவள். ஆனால் இக்கோயிலில் இருக்கும் ஆறடி உயர ஆறுமுகனை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவரை பிரம்மாண்ட சண்முகர் என்று கூறலாம். முன்புறம் மூன்று முகங்களும், பின்புறம் மூன்று முகங்களும் உள்ளன. பின்புற முகங்களை தரிசிக்க பெரிய நிலைக்கண்ணாடி வைத்திருக்கிறர்கள். ஐந்தடி உயர வள்ளி, தெய்வானையும் உடனுள்ளனர். இந்த சண்முகரைப் பார்த்தவர்களுக்கு அந்த இடத்தை விட்டு அகல மனம் வராது. அவ்வளவு அற்புதத் தோற்றம்.