சங்கு சக்கர முருகன்!
ADDED :3434 days ago
மகாவிஷ்ணுவைப்போல சங்கு, சக்கரத்துடன் விளங்கும் முருகனை தேவராயன்பேட்டை மச்சபுரீஸ்வரர் கோயிலில் காணலாம். பிராகாரத்திலுள்ள இந்த ஆறுமுகர் 12 திருக்கரங்களுடன் அருள்கிறார். உடன் வள்ளி, தெய்வானையும் உள்ளனர். சங்கு, சக்கரம் ஏந்திய முருகனை வணங்கினால் வாழ்நாள் முழுக்க வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த முருகனுக்கு எதிரே மகாவிஷ்ணுவும் அருள்பாலிக்கிறார். முருகனை விஷ்ணு பார்க்க, விஷ்ணுவை முருகன் பார்க்கிறார். இதனால் இவருடைய அருளும் பக்தர்களுக்குக் கிடைக்கிறது. இக்கோயில் 1,200 ஆண்டுகள் பழமையானது. மீன ராசிக்குரிய கோயில். மகாவிஷ்ணு சிவனை வணங்கிய தலம். அம்பாள் சந்நிதியிலுள்ள சக்கர மேரு சக்திவாய்ந்தது. தஞ்சாவூர் கும்பகோணம் வழியில் பண்டாரவாடையில் இறங்கினால் தேவராயன்பேட்டை செல்லலாம்.