கோவில் நூலகம் திறக்க பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED :3435 days ago
திருச்செங்கோடு: திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தி பதிகங்கள் மற்றும் நூல்கள் படிக்க திறக்கப்பட்ட நூலகம், கோவிலின் சிறிய இடத்தில் குறுகலான பகுதியில் உள்ளது. இது பெரும்பாலானோருக்கு தெரியாது. எனவே, பக்தர்கள் அமர்ந்து படிக்க என நல்ல வசதியுடன் காற்றோட்டமான இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட வேண்டும். மேலும், பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக காரணம் காட்டி நூலகம் சரிவர திறக்கப்படுவதில்லை. முறையாக நூலகம் திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.