உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பா சேவா சங்கம் சார்பில் சபரிமலையில் அன்னதானம்

ஐயப்பா சேவா சங்கம் சார்பில் சபரிமலையில் அன்னதானம்

குமாரபாளையம்: குமாரபாளையம் மற்றும் நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவை சங்கம் சார்பில் சபரி மலையில் ஐயப்ப பக்தர்கள் சேவை மற்றும் அன்னதானம் செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மற்றும் குமாரபாளையம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில், மாவட்ட செயலாளர் ஜெகதீஸ், நிர்வாகிகள் மணிகண்டன், பிரகாஷ், தேவராஜ் உள்ளிட்ட பலர் முன்னிலையில், கடந்த, 13ம் தேதி முதல் வரும், 19ம் தேதி வரை சபரி மலையில், பக்தர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் அன்னதானம் செய்து வருகின்றனர். இதுகுறித்து, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியம் கூறியதாவது: சபரிமலையில், நாள் ஒன்றுக்கு காலை, மாலை, மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் பக்தர்கள், 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். மேலும், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மூலிகை குடிநீர் வழங்குதல், இறந்தவர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லுதல், மருத்துவ முகாம் நடத்தி தேவையான மருத்துவ உதவிகள் செய்தல், உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !