சாந்தானந்த சுவாமிகள் ஆராதனை குருபூஜை
ADDED :3431 days ago
சென்னை: சேலையூர், ஓம் ஸ்ரீகந்தாஸ்ரமத்தின் ஸ்தாபகர் ஸத்குரு ஸ்ரீ மத் சாந்தானந்த சுவாமிகளின், 14வது ஆராதனை குருபூைஜ நடக்கிறது. வரும், 21ல், காலை, கணபதி மற்றும் ஆவஹந்தி ஹோமங்களும், பாராயணங்களும், மாதா புவனேஸ்வரி மற்றும் ஆதிகுரு தத்தாத்ரேயருக்கு பவுர்ணமி சிறப்பு அபிஷேகம் நடைபெறும். சுவாமிநாத சுவாமிக்கு, வைகாசி விசாக சிறப்பு அலங்கார ஆராதனை, அன்னதானமும் நடக்க உள்ளது. மாலையில், விஷ்ணு சகஸ்ரநாமம், இந்திராக்ஷி சிவகவசம், லலிதா சகஸ்ரநாம பாராயணங்களும், மாதா புவனேஸ்வரி, சுவாமிநாத சுவாமி ரதம் கோவில் உள்புறப்பாடும் நடைபெறுகிறது. சுவாமிகளின் ஆராதனை தினமான, 22ல், காலை, 8:30 மணி முதல், குரு வந்தனம், மஹன்யாசம் ருத்ராபிஷேகம், குருநாதருக்கு அபிஷேகம், குரு பாதுகா பூஜை, தீர்த்த நாராயண பூஜை, சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது.