உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீலட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி

ஸ்ரீலட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி

அவிநாசி: தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில், நரசிம்ம ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. அதிகாலை, 5:30 மணிக்கு, மூல மந்திர ஹோமம், சிறப்பு ஹோமம் ஆகியன நடைபெற்றன. அதன்பின், லட்சுமி நரசிம்மருக்கு, சிறப்பு திரு மஞ்சனம், அபிஷேகம் ஆகியன நடைபெற்றது. அவிநாசி, சேவூர், திருப்பூர் வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !