குப்பச்சிவலசையில் வைகாசி வசந்தவிழா
ADDED :3431 days ago
கீழக்கரை: திருப்புல்லாணி அருகே குப்பச்சிவலசையில் வலம்புரி விநாயகர், பாலமுருகன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி வசந்தவிழா நடப்பது வழக்கம். 37வது ஆண்டு வசந்தவிழாவை முன்னிட்டு மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம், வேல்காவடி, அலகுகுத்தியும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.