உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஸ் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது ஏன்?

பஸ் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது ஏன்?

பாதயாத்திரையாக சென்று இறைவனை வணங்கும் முறை சமீபத்தில் அதிகரித்துள்ளது. முற்காலத்தில் வாகனங்கள் இல்லாத சூழ்நிலையில் அடியவர்கள் தெற்கிலிருந்து இமயமலை வரையும், இமயத்திலிருந்து பொதிகை வரையும் உள்ள தலங்களை நடந்துசென்றே தரிசித்தனர். இதே வழக்கம் இப்போதும் ஏற்பட்டுள்ளது. காலச்சூழ்நிலை கருதி குறுகிய இடத்திற்குள் பாதயாத்திரை செல்கின்றனர்.  பழநி, திருப்பதி ஆகிய தலங்களுக்கு பாதயாத்திரை செல்வோர் அதிகம். ஒருவன் தன்னைத்தானே வருத்திக் கொள்வதன் மூலமே தான் என்ற அகங்காரத்தைக் குறைக்க முடியும் என்பதின் அடிப்படையிலேயே பாதயாத்திரை நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !