உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா

அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடந்த நரசிம்ம ஜெயந்தி விழாவில்‚ சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்ம ஜெயந்தி விழா இரண்டு நாட்கள் நடந்தது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை 8:00 மணிக்கு மூலவர் லட்சுமி நரசிம்மர்க்கு சிறப்பு திருமஞ்சனம், 9:00 மணிக்கு வேதவிற்பன்னர்கள் வேதமந்திரம் முழங்க உற்சவ மூர்த்தி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ நிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம்‚ மகா தீபாராதனை நடந்தது.  மாலை 5:00 மணிக்கு லட்சார்ச்சனை‚ மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !