திருநள்ளார் தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம்!
ADDED :3428 days ago
காரைக்கால்: திருநள்ளார் தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்ச விழாவில் தெப்போற்சவம் நடந்தது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலின் பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு , பஞ்சமூர்த்திகள் வீதி உலா, தங்க ரிஷப வாகனம் மற்றும் தேரோட்டம், சனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. விழாவில் இன்று (மே.21ல்) தெப்போற்சவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனார்.