உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகம்

வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத முருகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  திருக்கோவிலுார்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 9 நாட்களாக நடந்து வந்தது. விழாவின் 9ம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு அனுக்ஞை‚ விக்னேஷ்வர பூஜை‚ புன்யாகவாசகம்‚ பஞ்சாசன பூஜைகள் நடந்தது. மூலவர் வள்ளிதேவ சேனாசமேத முருகர்க்கு மகா அபிஷகம்‚ விபூதி அலங்காரம்‚ தீபாராதனை நடந்தது.  சம்காரமூர்த்தி‚ மகாபைரவர்க்கு ஸ்ரீருத்ரபூஜை‚ 64 பைரவ பூஜை‚ பைரவ ஹாமம்‚ 11:00 மணிக்கு மகாபைரவர்க்கு அபிஷகம்‚ அலங்காரம்‚ தீபாராதனை நடந்தது. மாலை 7:00 மணிக்கு மூலவர்‚ உற்சவ மூர்த்திகளுக்கு சோடசோபவுபச்சார தீபாராதனை‚ பைரவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !