திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மொட்டையரசு திருவிழா!
ADDED :3624 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தின் உச்ச நிகழ்ச்சியான மொட்டையரசு திருவிழா நேற்று நடந்தது. கோயிலில் மே 12ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கிய விசாக திருவிழாவில் தினமும் இரவு சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வசந்த உற்சவம் நடந்தது. நேற்றுமுன்தினம் பால்குட உற்சவம் நடந்தது. நேற்று காலை உற்சவர் சுவாமி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளினர். இரவு பூ பல்லக்கில் சுவாமி கோயில் சென்றடைந்தார்.