புனித சலேத்மாதா திருத்தல பெருவிழா
ADDED :3424 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் மறவபட்டி புதுார் புனித சலேத்மாதா திருவிழாவில் கிறிஸ்தவர்கள் சப்பரத்தை சுற்றி முழங்காலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மறவபட்டி புதுõரில் 131 ஆண்டு பழமை வாய்ந்த புனித சலேத் மாதா ஆலயம் உள்ளது. நேற்று ஏப்.,20ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஏப்.,21ல் தேரடித் திருப்பலி, புதுநன்மை வழங்குதல், மின்தேர் அர்ச்சிப்பு, தப்பாட்டம், மின்தேர்பவனி வாண வேடிக்கையுடன் நடந்தது. நேற்று அன்னையின் பகல் பெரிய தேர்ப்பவனி நடந்தது. மாலை 5.30 மணிக்கு தேரைச் சுற்றி முழங்காலிட்டு, மெழுகுவர்த்தி ஏந்தி சுற்றிவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமானோர் சப்பரத்தை சுற்றி அங்கப் பிரதட்சணமும் செய்தனர். பாதிரியார் ஜான்பீட்டர் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.