கலங்காப்புளி சூசையப்பர் தேர்ப் பவனி விழா
ADDED :3422 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கலங்காப்புளி சூசையப்பர் சர்ச் விழா கடந்த மே,13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவில் திருப்பலி நடைபெற்று வந்தது. முக்கிய விழாவான தேர்ப்பவனி விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சூசையப்பர் வீதி உலா வந்தார். திருப்பலி நடைபெற்று, நேற்று விழா நிறைவடைந்தது.