சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா
ADDED :3420 days ago
அழகர்கோவில்: சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. நேற்று பக்தர்கள் 18ம் படி கருப்பண சுவாமி சன்னதியில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர். உற்சவர் முருகனுக்கு பாலாபிஷேகம், தீப ஆராதனைகள் நடந்தன. மாலையில் மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.