பழநி: ஞாயிறு பொதுவிடுமுறையை முன்னிட்டு பழநியில் குவிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 3மணிநேரம் காத்திருந்தனர். கோடை விடுமுறையை முன்னிட்டு பழநி மலைக்கோயிலுக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். நேற்று ஞாயிற்று கிழமையை முன்னிட்டு வெளியூர் பக்தர்களுடன் உள்ளூர் வாசிகளும் தீர்த்தக்குடங்கள், காவடிகள், பால்குடங்களுடன் குவிந்தனர். இதனால் வின்ச், ரோப்கார் ஸ்டேஷன்களில் 2 மணிநேரம் வரை காத்திருந்து மலைக் கோயிலுக்கு சென்றனர். வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசையில் 3 மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். இதைப் போலவே இரவு 7 மணிக்கு தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.