உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 12 நாளில் பலன்!

12 நாளில் பலன்!

லலிதா, சிவ, கிருஷ்ண, ராம சகஸ்ர நாமங்கள் என பல இருந்தாலும், சகஸ்ர நாமம் என்பது விஷ்ணு சகஸ்ர நாமத்தையே குறிக்கும் என்பர். தர்மருக்கு பீஷ்மரால் உபதேசிக்கப்பட்டது விஷ்ணு சகஸ்ரநாமம். இதை உபதேசித்த போது, விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணரும் உடனிருந்து கேட்டார். பகவானை (தன்னை) விட அவரது திருநாமத்திற்கு மகிமை அதிகம் என்பதால் கிருஷ்ணரே விஷ்ணு சகஸ்ரநாமத்தைக் கேட்டாராம்.ஏதாவது பலன் கருதி விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பவர்கள் காலை அல்லது மாலையில் வீட்டில் விளக்கேற்றி பக்தியுடன் இதனைப் படிக்கலாம். இதற்கு காம்ய பாராயணம் என்பர். நினைத்தது நிறைவேற 12 நாட்கள் படிக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமத்தை படிப்போருக்கு நோயற்ற வாழ்வு உண்டாகும் என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !