சித்தர்கள் முருகன் தலங்களில் மட்டும் தான் வாழ்ந்தார்களா?
ADDED :3428 days ago
சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். முருகனையே சித்தர் மரபில் முதன்மையானவராகவும், குருநாதராகவும் போற்றி வணங்குவர். ஆறுபடை வீடுகளைப் போலவே, சித்தர்கள் சிவனடியார்களாக திருவண்ணாமலை, சதுரகிரி போன்ற மலைக்கோயில்களில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். சிவனே எல்லாம் வல்ல சித்தராக வந்ததாக மதுரை தல வரலாறு கூறுகிறது.