ஹஜார் புஜ காளி!
ADDED :3429 days ago
காளி கட் என்று போற்றப்பட்ட கோல்கட்டா சக்தி பீடங்களில் ஒன்று. இங்கு அம்பிகை மிகவும் உக்ரமானவளாக கருதப்படுகிறாள். சிவப்பு ஆடை உடுத்தி, கபால மாலை அணிந்து, செந்நிற நாக்கினைத் தொங்க விட்டு காட்சி தரும் இவளை ஹஜார் புஜ காளி என்பர். ஹஜார் புஜம் என்பதற்கு ஆயிரம் கைகள் என்று பொருள். சிங்கத்தை வாகனமாகக் கொண்டவள்.கோல்கட்டா தட்சிணேஸ்வரத்தில் உள்ள பவதாரிணி கோயில் புகழ்மிக்கது. பவதாரிணி கோயில் அர்ச்சகராக இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் அம்பாளிடம் இயல்பாகப் பேசும் வழக்கம் கொண்டிருந்தார். சர்வ மங்களா என சிறப் பிக்கப்படும் இவளை வணங்குவோருக்கு சகல சவுபாக்கியமும் உண்டாகும்.