உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் வசந்தபுரத்தில் ஜகத்குரு ஜெயந்தி விழா

திண்டிவனம் வசந்தபுரத்தில் ஜகத்குரு ஜெயந்தி விழா

திண்டிவனம்: திண்டிவனத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா நடந்தது.  திண்டிவனம் வசந்தபுரம் கரியன் நகரில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா நடந்தது.  விழாவையொட்டி, காலை ௭:00 மணிக்கு, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஜெப ஹோமம், தீபாராதனை நடந்தது.  மதியம் ௨.௪௫ மணிக்கு  விஷ்ணு சஹஸ்ரநாம, லலிதா சஹஸ்ரநாம பாராயணமும் நடந்தது.  மாலை ௬:௦௦ மணிக்கு, சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளின் திருவுருவ  படத்தின் வீதியுலா நடந்தது. மயிலம் பொம்மபுர ஆதீனம் ௨௦ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள், வீதியுலாவை துவக்கி வைத்தார். திண்டிவனம்  நகரத்தில் மாட வீதியுலா சென்று, மீண்டும், கரியன் நகருக்கு வீதியுலா வந்தடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !