முத்துமாரியம்மன் கோவிலில் பூகுண்ட உற்சவம் பக்தர்கள் பரவசம்!
ADDED :3422 days ago
குன்னுார்: குன்னுார் அருகே, பழைய அருவங்காடு பகுதியில் உள்ள அன்னை முத்துமாரியம்மன் கோவிலில், 44ம் ஆண்டு கரகம், பூகுண்ட உற்சவம் நடந்தது. இதை தொடர்ந்து, முத்துப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று பூகுண்டம் உற்சவம் அன்னதானம், மாவிளக்குபூஜை, அம்மன் திருவீதி உலா ஆகியவை நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.