பொன்னேரி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :3424 days ago
எருமப்பட்டி: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா, போடிநாயக்கன்பட்டி பொன்னேரி மாரியம்மனுக்கு, கடந்த, 10ம் தேதி, சக்தி அழைத்து காப்பு கட்டப்பட்டது. நேற்று, காலை மாவிளக்கு பூஜையும், மதியம் அக்னிசட்டி எடுத்தலும், மாலை அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, இன்று பொங்கல் வைத்தல், கிடாவெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (25ம் தேதி) அம்மன் ஊஞ்சலில் பவனி வருகிறார். மாலை மஞ்சள் நீராட்டு விழாவும், கம்பம் குடிவிடும் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது.