கடல்சூழ்ந்தமாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
ADDED :3526 days ago
திருவாடான: தொண்டி மகாதிபுரத்தில் உள்ள கடல்சூழ்ந்தமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பால், பறவைகாவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொண்டி அருகே பாசானி கிராமத்தில் உள்ள ஆரோக்கியஅன்னை, பாப்பனக்கோட்டை அந்தோணியார் ஆலயம், எஸ்.பி.பட்டினம் மண்டலகோட்டையில் உள்ள செபஸ்தியார் ஆலய திருவிழாக்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு தேர்பவனி, சிறப்பு திருப்பலி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.