உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவேரியார் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி

சவேரியார் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி

புதுச்சேரி: அரியாங்குப்பம் சவேரியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடந்தது. அரியாங்குப்பம் புனித சவேரியார் ஆலயத்தில் 89ம் ஆண்டு பெருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி - கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமை தாங்கினார். தொடர்ந்து, தவ நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி, மறையுரை, சிறிய தேர்பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி நேற்று நடந்தது. ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., அரியாங்குப்பம் பங்குத்தந்தை தாமஸ் மற்றும் ஆலய நிர்வாக குழுவினர் தேர்பவனியை துவக்கி வைத்தனர். மாதர் சங்கத்தினர், பாடல் குழுவினர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக அருட்தந்தைகள் பால் ராஜ்குமார், செல்வம், ரட்சகர் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !