உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

ஆர்.கே.பேட்டை: வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை, பஜார் வீதியில் உள்ளது வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில். ஓராண்டாக கோவில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. ஆர்.கே.பேட்டை ஆர்ய வைஸ்ய மரபினர், இதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர். சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை ஒட்டி, நாளை காலை, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  இதற்கான யாகசாலை பூஜை, நேற்று காலை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி மற்றும் பிரவேச பலி நடந்தது. இன்று காலை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெறும்.  நாளை, காலை, 7:00 மணிக்கு, யாத்ரா தானம், பூர்ணாஹூதியும், அதை தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு, வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !