சேஷ வாகனத்தில் ராஜகோபால சுவாமி வீதியுலா
ADDED :3759 days ago
விருத்தாசலம்: வைகாசி பிரம்மோற்சவ நான்காம் நாள் உற்சவத்தில், ராஜகோபால சுவாமி சேஷ வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். வி ருத்தாசலம் பெரியார் நகர் ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நான்காம் நாள் உற்சவமாக நேற்று முன்தினம் காலை பட்டாபிராமர் அலங்காரத்தில் பல்லக்கில் சுவாமி வீதியுலா, பகல் 11:00 மணிக்கு திருமஞ்சனம், சேவா காலம், சாத்துமுறை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு சேஷ வாகனத்தில் பெரிய பெருமாள் உபயநாச்சியாருடன் பரமபதநாதன் சேவை அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து அருள்பாலித்தார்.