மணவாழ்வு தரும் தலம்!
ADDED :3443 days ago
புதுச்சேரி வில்லியனுõர் அருகில் உள்ள தலம் நல்லாத்துõர். இங்குள்ள வரதராஜப்பெருமாள் கோயிலில் ஏப்.1ல் சீதாகல்யாண உற்ஸவம் நடக்கிறது. மாலை 6மணிக்கு சீதாராமர் மணக்கோலத்தில் அலங்கார மண்டபத்தில் ஒய்யாளி சேவை சாதிப்பர். மாலை மாற்றுதல், ஜனகமகாராஜா சீதனம் வழ ங்குதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சடங்குகள் நடக்கும். ஏப்.3ல், மணமாகாத ஆண், பெண்கள் காலை8 முதல் மதியம் 1, மாலை 4 முதல் இரவு8 வரை ராமர்சீதை காப்புக்கயிறு கட்டிக் கொள்ளலாம். இதனால் சீக்கிரம் திருமணம் நிச்சயமாகும் என்ற நம்பிக்கை உள்ளது.