உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

அவலுார்பேட்டை: கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தேர்த் திருவிழா நடந்தது.  மேல்மலையனுார் தாலுகா, கெங்கபுரம் கிராமத்திலு ள்ள பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா, கடந்த 19ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.  தினசரி இரவில்  அம்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் காலையில் திருத்தேர்  வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !