புதுச்சேரி திரவுபதியம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்!
ADDED :3530 days ago
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது.
முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வந் தது. 23ம் தேதி கரக திருவிழாவும், 24ம் தேதி பகாசூரன் வதம், 25ம் தேதி அர்ச்சுனன், திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா கடந்த 27ம் தேதி நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழாவும், தெப்பல் உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.