புள்ளலுார் கோவிலில் துரியோதனன் படுகளம் கோலாகலம்!
ADDED :3531 days ago
வாலாஜாபாத்: புள்ளலுார், திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, கடந்த 11ம் தேதி, அக்னி வசந்த உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி யது. தினந்தோறும் காலை, மாலை சிறப்பு அபிஷேகமும்; பகல், 1:00 மணி முதல், மாலை 5:00 மணி வரையில், மகாபாரத சொற்பொழிவும்; இரவு, நாடகமும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, கர்ண மோட்சமும்; அதை தொடர்ந்து, காலை, 9:30 மணி அளவில், துரியோதனன் படுகள நிகழ்ச்சியும் நடந்தது. இதை தொடர்ந்து, புள்ளலுார், அரங்கநாதபுரம் ஆகிய கிராமவாசிகள், நேற்று மாலை, தீமிதி திருவிழாவில், தீமித்து நேர்த்தி கடன் செலு த்தினர்.