செம்பொற்சோதிநாதர் கோவிலில் பெரியபுராண சொற்பொழிவு
ADDED :3432 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் பெரியபுராண சொற்பொழிவு மற்றும் திருவாசகம் முற்றோதல் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் வைகாசி மாத சதய நட்சத்திர தினமான நேற்று திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடந்தது. மூலவர் செம்பொற்சோதிநாதர், உற்சவர்கள் திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின் 51 பதிகங்கள் மற்றும் அதிலுள்ள 658 பாடல்களை கோவில் ஓதுவார்கள் ஓதினர். மாகேஸ்வர பூஜைக்குப்பின் பவானி சிவனடியார்கள் திருக்கூட்டத்தை சேர்ந்த பிரகாஷ் சிவனடிமையின் பெரியபுரான சொற்பொழிவு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.