உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுாரில் வைஷ்ணவ மாநாடு

கடலுாரில் வைஷ்ணவ மாநாடு

கடலுார்: கடலுாரில் 10ம் ஆண்டு வைஷ்ணவ மாநாடு நடந்தது.  நம்பிள்ளை கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்த வைணவ இளைஞர்கள் குழு  சார்பில் பக வத் ராமானுஜர் பிறந்து ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு வைஷ்ணவ மாநாடு கடலுாரில் நேற்று, நடந்தது. இதனை முன்னிட்டு கட லுார் வீர ஆஞ்ச நேயர் கோவிலில் இருந்து பஜனை ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கூத்தப்பாக்கத் தில் மாநாடு நடைபெறும்  இடத்தில் முடிந்தது.  மாநாட்டிற்கு சடகோ பன் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அனந்தாழ்வான் ராமானுஜதாசன் திருமால் வணக்கம் பாடினார். சீதா  ராமன் ராமானுஜதேசிகதா சன் முன்னிலை வகித்தார். ராமானுஜ மகாதேசிகன், நரசிம்மப்பிரியா, வெங்க டேசன், பார்த்தசாரதி பேசி னர். மாநாட்டில்  ராமானு ஜர் கொள்கைகளை பின்பற்றி பரப்பிய 12 பேருக்கு ‘உடையவர் திருவடி’  என்ற விருது வழங்கப்பட்டது. மாநாட்டில் ராமானுஜருக்கு  மணிமண்டபம் அமைக்க வேண்டும். ராமானுஜர் ரத ஊர்வலம் நடத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !