தோகைமலை நாகம்மாள் கோவிலில் மஹா மண்டல பூஜை
ADDED :3431 days ago
கரூர்: தோகைமலை நாகம்மாள் கோவிலில், மஹா மண்டல பூஜை நடந்தது. கரூர் மாவட்டம், தோகைமலை நாகம்மாள் கோவிலில், கும்பாபிஷேகம் விழாவை தொடர்ந்து, மண்டல பூஜை நடந்து வருகிறது. இதில், நேற்று, 48ம் நாள் மஹா மண்டல அபி ?ஷகத்தை முன்னிட்டு யாக சாலைகளில் பல்வேறு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, 48 திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ஏராளாமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் குளித்தலை, தி.மு.க., - எம்.எல்.ஏ., ராமர், நாகம்மாள் கோவில் அறங்காவலர் பொன்னம்பலம் உட்பட பலர் பங்கேற்றனர்.