வால்பாறை கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை!
ADDED :3478 days ago
வால்பாறை: வால்பாறை பகுதியில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தேய் பிறை அஷ்டமி தினமான நேற்று முன்தினம் மாலை, காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 16 வகை அபிஷேகம் செய்து, அரளி பூ மாலையிட்டு, 108 வடை மாலை சாற்றி பூஜைகள் செய்தனர். தேங்காய், பூசனிக்காய்களில் தீபம் ஏ்ற்றி பெண்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.