உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசியில் சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம்

அவிநாசியில் சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம்

அவிநாசி: அவிநாசியில் புதிதாக உருவாக்கப்பட்ட சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம், ஜூலை, 10ல் நடைபெறுகிறது. அவிநாசியில் இயங்கும்,  பஞ்சமூர்த்திகள்  63 நாயன்மார்கள்  வழிபாட்டுக்குழு அறக்கட்டளை கூட்டம், விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்றது; அறக்கட்டளை தலைவர்  சீனிவாசன் தலைமை வகித்தார். செயலாளர் ரங்கராஜ் முன்னிலை வகித்தார். பொருளாளர் நந்தகுமார் வரவேற்றார். இதில், ‘சுப்ரமணியர் தேர் திரு ப்பணி நிறைவு பெற்றுள்ளதால், வெள்ளோட்டத்தை, ஜூலை, 10ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடத்துவது; தேரை, முறைப்படி கோவில்  நிர்வாகத்திடம் ஒப்படைப்பது; அதற்கான பணியை மேற்கொள் வது’ என, தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிர்வாகிகள் சரவணன், பாலசுந் தர்ராஜன் உள்ளிட்ட உறுப்பினர்கள்  பலர் பங்கேற்றனர். அறக்கட்டளை துணை செயலாளர் சாய் கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !