உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சைவாழியம்மன் கோவில் மகா நட்சத்திர வேள்வி யாகம்!

பச்சைவாழியம்மன் கோவில் மகா நட்சத்திர வேள்வி யாகம்!

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் கூட்ரோட்டிலுள்ள மன்னார்சுவாமி பச்சைவாழியம்மன் கோவிலில் மகா நட்சத்திர வேள்வியாக  நிறைவு விழா நடந்தது. மகா நட்சத்திர வேள்வி யாகம் கடந்த 3ம் தேதி, பூரட்டாதி நட்சத்திரத்தில் துவங்கியது. இதை தொடர்ந்து 27 நட்சத்திர ங்களுக்கு கூட்டாகவும், அவரவர் நட்சத்திரங்களுக்கு தனியாகவும், தினந்தோறும் காலை 10:35 மணிக்கு யாகம் நடந்தது.  தொடர்ந்து 26 நாட்கள்  நடந்த நட்சத்திர வேள்வி யாகம் நேற்று நிறைவு நாளையொட்டி, காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அர்ச்சனை, ஆராதனை, பூ ர்ணாஹூதி, நவக்கிரக தேவதைகளுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு புண்ணியதீர்த்தம் வழங்கப்பட்டது.  இந்த யாகத்தில் பணம் செலுத்தி  கலந்து கொண்டவர்களுக்கு, யாகத்தில் பூஜை செய்து வந்த சகல ஐஸ்வர்யம் தரும் யந்திரம் கலசத்துடன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை  கைலாச ரவீந்திரநாத் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !