உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோனானூர் மாரியம்மன் கோவில் திருவிழா

கோனானூர் மாரியம்மன் கோவில் திருவிழா

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. சேந்தமங்கலம் அடுத்த, கோனானூர் மகாசக்தி மாரியம்மன் கோவிலில், கடந்த, 24ம் தேதி, காவிரி ஆற்றிலிருந்து அம்மனுக்கு தீர்த்தம் எடுத்து வந்து காப்பு கட்டப்பட்டது. நாள்தோறும் மாரியம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தன அபிஷேகமும், ஆராதனைகளும் நடந்து வந்தன. நேற்று, அம்மனுக்கு மாவிளக்கு பூஜையும், பொங்கல் வைத்து படைத்தனர். இதில், திரளான பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று கிடாவெட்டும், நாளை (1ம் தேதி) மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன், கம்பம் குடிவிடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !