உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமர்ப்பன சேவை மையத்தில் சக்தி கணபதிக்கு விளக்கு பூஜை!

சமர்ப்பன சேவை மையத்தில் சக்தி கணபதிக்கு விளக்கு பூஜை!

விழுப்புரம்: சமர்ப்பன சேவை மைய சக்தி கணபதி கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.  விழுப்புரம் சமர்ப்பன சேவை மையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி  கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை தொடர்ந்து  மண்டலாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு சக்தி  கணபதிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில்,  ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை விக்னேஷ் குருக்கள் செய்திருந்தார்.  இதில்,  ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !