உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் 15ம் ஆண்டு செடல் திருவிழா

செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் 15ம் ஆண்டு செடல் திருவிழா

புதுச்சேரி: வில்லியனுார் ஜி.என். பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவில் 15ம் ஆண்டு செடல் திருவிழா நேற்று நடந்தது. ஜி.என். பாளை யம் செல்லமுத்து மாரியம்மன் கோவில் செடல்  பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  விழா நாட்களில்  அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. கடந்த 29ம் தேதி பிடாரிய ம்மனுக்கு ஊரணி பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. 30ம் தேதி  ஐயனாரப்பனுக்கு பொங்கலிட்டு குதிரை விடுதல் நிகழ்ச்சியும், இரவு  அலங்கரிக்கப் பட்ட சுவாமி வீதியுலாவும் நடந்தது. நேற்று காலை 7:00  மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 10:00 மணிக்கு மேல் செடல்  உற்சவம் நடந் தது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். பகல் 12:00 மணிக்கு மேல் சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு  9:00 மணிக்கு  மேல் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. இன்று 1ம் தேதி காலை 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு  விழாவும், இரவு 7:00  மணிக்கு மேல் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், உபயதாரர்கள் மற்றும் கிராம  வாசிகள்  செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !