ஊட்டி வன பத்ரகாளியம்மன் கோவில் ஆண்டு விழா
ADDED :3448 days ago
ஊட்டி: ஊட்டி எல்க்ஹில் ரத்னவிலாஸ் வன பத்ரகாளியம்மன் கோவில், 22ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில், மகா கணபதி ஹோமம், பலமுருகனுக்கு திரிசதி ஹோமம், துர்கா ஹோமம், பூர்ணாகுதி, அபிஷேக பூஜைகள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாம்பேகேஷில் முனீஸ்வரர் கோவிலில் இருந்து, கரக ஊர்வலம் புறப்பட்டு, ஜெ.எஸ்.எஸ்., கல்லுாரி வழியாக கோவிலை வந்தடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.