காளியம்மன் கோவில் விழா: எருமை கன்று வெட்டி நேர்த்திக்கடன்!
ADDED :3448 days ago
குளித்தலை: நாகனூரில் நடந்த காளியம்மன் கோவில் விழாவில், நேர்த்திக்கடனாக, எருமை கன்றுகள் பலிகொடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, நாகனூரில் காளியம்மன், பகவதியம்மன், கருப்பசாமி ஆகிய பரிவார சுவாமிக்கு திருவிழா நடந்தது. இதில், கரகம் பாலித்து பல்லக்கு ஊர்வலம், வாணவேடிக்கை, கரகாட்டம், பொங்கல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல், அலகுபோடுதல் ஆகியவற்றுடன் கிராமிய பாடல் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று, காளியம்மன் கோவிலில், நேர்த்திக்கடனாக எருமை கன்றுகள் பலிகொடுத்து, பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மாவட்டம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காளியம்மனை வழிபட்டனர்.