உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எருமப்பட்டி பகவதி அம்மன் கோவில் திருவிழா

எருமப்பட்டி பகவதி அம்மன் கோவில் திருவிழா

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி அடுத்த பழையபாளையம் பகவதி அம்மன் கோவிலில், கடந்த, 15ம் தேதி, காவிரி ஆற்றிலிருந்து அம்மனுக்கு தீர்த்தம் எடுத்து வந்து காப்பு கட்டப்பட்டது. நாள்தோறும், பகவதி அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், சந்தன அபிஷேகமும், ஆராதனைகளும் நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் நகர்வலம் வந்தார். நேற்றுமுன்தினம் மாலை, மாரியம்மன் கோவில் முன்பாக ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர். நேற்று மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன், கம்பம் குடிவிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !