ஜெயசக்தி மாரியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா
ADDED :3449 days ago
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே வேலாயுதபுரம் ஜெயசக்தி மாரியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்தனர். முன்னதாக, முதல் நாளில், பெண்கள் அனைவரும் கோயில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் செய்தனர். விழாவை ஒட்டி இன்னிசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்தனர்.