ஆலம்பாடி காளியம்மன் கோயில் பூக்குழி விழா
ADDED :3449 days ago
திருவாடானை: திருவாடானை அருகே ஆலம்பாடி காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அம்மனுக்கு சந்தணக்காப்பு அலங்காரம், தீபாராதனை, திருவிளக்கு பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடந்த பூக்குழி விழாவில் ஏராளமான பக்தர்கள் கரகம், காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் நிறைவு செய்தனர்.